search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்சுக் மாண்டவியா"

    • திருத்தப்பட்ட தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • புற்றுநோய்க்கான மருந்து உள்பட புதிதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    2022-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். இந்தப் பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் இடம்பெற்றுள்ளன.

    இதில் புதிதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் ஐவர்மெக்டின், முபுரோசின் போன்ற நோய்த் தொற்றை தடுக்கும் மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

    அதே நேரத்தில் ரேனிடிடைன், சுக்ரால்பேட், எரித்ரோமைசின், ரேன்டாக், ஜென்டாக் உள்பட 26 மருந்துகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மிகவும் விலை குறைந்த மாற்று மருந்துகள் கிடைப்பதால் இவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • காசநோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
    • காசநோயை ஏற்படுத்தும் கிருமிகள் அனைவரின் உடலிலும் உள்ளது.

    பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காசநோயை முற்றிலுமாக அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் அனைவரும் இதற்கு முன்னுரிமை அளித்து பேரியக்கமாக மாற்ற வேண்டும். நம் நாட்டில் காசநோய் மூலமே அதிக இறப்பு உள்ளது. உலக அளவில் இந்தியாவில் மட்டும் காசநோய்க்கு 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது கட்டாயமாகும்.நோய் தாக்கத்திற்கு முன்பாகவே அதில் இருந்து காப்பது சாத்தியமானது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்நோயிலிருந்து மக்களை காப்பதற்கும், இலவசமாக மருத்துவ வசதி அளிப்பதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நோய் குறித்து சிலருக்கு தவறான கண்ணோட்டம் உள்ளது. இது முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்.

    காசநோயை ஏற்படுத்தும் கிருமிகள் அனைவரின் உடலிலும் உள்ளது. ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது காச நோய் ஏற்படுகிறது. சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்நோயிலிருந்து முழுவதுமாக குணமடைய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் எளிதில் அணுகும் வகையில் சுகாதார சேவைகளை வழங்க வேண்டும்.
    • நாடு முழுவதும் ஆரோக்கிய மையங்களை விரிவுப்படுத்த முயற்சி.

    சில்சார்:

    அசாம் மாநிலம் சில்சாரில், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஆரோக்கிய மையத்தை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், மத்திய அரசின் சுகாதாரத் திட்ட சேவைகளை மக்கள் எளிதில் பெறுவதற்கும், ஆரோக்கிய மையங்களின் எண்ணிக்கையில் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    2014-ல், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் ஆரோக்கிய மையங்களின் எண்ணிக்கை 25-ஆக இருந்த நிலையில் தற்போது 75-ஆக உயர்ந்துள்ளது. மக்கள் எளிதில் அணுகக் கூடிய தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் மத்திய அரசின் உறுதியுடன் உள்ளது.

    மருத்துவ சேவைகளை மேம்படுத்த, நாடு முழுவதும் ஆரோக்கிய மையங்களை விரிவுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சியின் கீழ் 16 புதிய மையங்கள் அமைக்கப் படுகின்றன. அதில் சில்சார் மையமும் ஒன்றாக உள்ளது. சுகாதாரத் திட்ட சேவைகளின் பயன்களை மக்கள் பெறுவதற்காக மத்திய அரசு பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மற்றவர்களின் நலனை பற்றி சிந்திப்பதே நமது கலாச்சார பாரம்பரியம்.
    • மனித நேயத்திற்காக உறுப்புகளை தானம் செய்ய மக்கள் முன்வருவதை ஊக்குவிக்க வேண்டும்.

    ஆரோக்கியமான வலுவான இந்தியா மாநாட்டை டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். சிக்கிம் ஆளுநர் ஸ்ரீ கங்கா பிரசாத் இந்த மாநாட்டிற்கு முன்னிலை வகித்தார். இந்தியாவில் உடல் உறுப்பு, கண் தானத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்தும் எதிர்காலத்தில் வரவிருக்கும் சவால்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

    மாநாட்டில் உரையாற்றிய மன்சுக் மாண்டவியா, நமது சொந்த நலன் மட்டுமல்ல, மற்றவர்களின் நலனையும் பற்றி சிந்திப்பதே நமது கலாச்சார பாரம்பரியம் என்று கூறினார். உறுப்பு தானம் பற்றிய பிரச்சினை அத்தகைய பார்வையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 


    மனித நேயத்திற்காக தங்கள் உறுப்புகளை தானம் செய்ய மக்கள் முன்வருவதை ஊக்குவிக்க, மக்கள் இயக்கமாக இதனை மாற்றவேண்டும் என்று மத்திய மந்திரி கேட்டுக்கொண்டார். உறுப்பு தானம் செய்ய மக்களை ஊக்குவிக்க அரசாலோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலோ மட்டும் சாத்தியமில்லை என்றும், அந்த இயக்கம் வெற்றிபெற அது மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    உடல் உறுப்பு, கண் தானம் குறித்த தேசிய மக்கள் இயக்கம் வெற்றி பெற உழைக்குமாறு அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டார். உடல் உறுப்பு தான இயக்கத்தின் அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதற்கு தமது அமைச்சகம் முழு மனதுடன் உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    • மருந்து உற்பத்தி நிறுவனங்கள் புதுமையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
    • மருந்து நிறுவனங்களுக்கு அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

    தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய வெள்ளிவிழா கொண்டாட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளதாவது:

    தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், ஒரு மருந்து கட்டுப்பாட்டாளராக மட்டுமின்றி, மருந்துகள் எளிதில் கிடைக்கும் வகையில் பணியாற்றுவது பாராட்டத்தக்கது.

    வணிக நோக்கத்துக்காக மட்டுமின்றி, மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், மருந்துகளை தயாரிக்க வேண்டும், புதுமையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய மருந்து நிறுவனங்களுக்கு அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

    மருந்து உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு, ஊக்கத்தொகை திட்டங்கள் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்திய மருந்து நிறுவனங்கள் சிறப்பாக பங்காற்றின. மக்களுக்கு தரமான சுகாதார சேவையை அளிப்பதில், தொழில்துறைக்கும், அரசாங்கத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திருநங்கைகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
    • அடித்தட்டு மக்கள் கண்ணியத்துடன் வாழ மத்திய அரசு அக்கறை செலுத்துகிறது.

    திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வகை செய்யும் புதிய ஒப்பந்தம், தேசிய சுகாதார ஆணையம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி வீரேந்திர குமார் ஆகியோர் பங்கேற்றனர். 


    அவர்கள் முன்னிலையில், தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஆர்.எஸ்.சர்மா, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர் ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், திருநங்கைகளுக்கு சுகாதார சேவைகள் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். திருநங்கைகளுக்கான தேசிய இணையதளம் வழங்கிய சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு அனைத்து மருத்துவ சிகிச்சை பயன்களும் கிடைப்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளதாக அவர் கூறினார். 


    திருநங்கைகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்குவதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் நிதி அளிக்கவுள்ளது என்று தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்ட பயன்களுடன் திருநங்கைகளுக்கான பாலியல் அறுவை சிகிச்சை திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் அடிப்படை சமூக மாற்றத்திற்கான ஒரு முக்கியமான தினமாக இது அமைகிறது என்றும், இந்த நடவடிக்கை பாலியல் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும் அப்பாற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்

    பின்னர் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி வீரேந்திர குமார், சமூகத்தில் அடித்தட்டு மக்கள், கல்வி, கண்ணியத்துடன் வாழ்தல், சுகாதார உதவி, வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். 

    • மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க நடவடிக்கை.
    • மத்திய அரசு வழங்கும் நிதியை உரிய நேரத்தில் மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும்.

    அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று கலந்துரையாடினார்.

    காணொலி வழியே நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி டாக்டர் பாரதி பிரவீன் பவார் பங்கேற்றார்.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ், டெல்லி சுகாதார அமைச்சர் மணிஷ் சிசோடியா, புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி உட்பட பல்வேறு மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களும் இதில் கலந்து கொண்டனர். 


    தேசிய சுகாதார இயக்கம், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம், 15ஆவது நிதி ஆணைய மானியங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தப்படுவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா,  18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ்கொரோனா தடுப்பூசி வழங்குவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கொரோனா பெருந்தொற்று நமக்கு, சுகாதார உள்கட்டமைப்பை ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் வலுப்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துள்ளதாக அவர் கூறினார். நாடு முழுவதும் பல அடுக்கு சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்கி வலுப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

    மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சையை வழங்குவதில் மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என்றும், இதற்காக மத்திய அரசு வழங்கும் நிதியை, சில மாநிலங்கள் குறைந்த அளவில் பயன்படுத்தியிருப்பதாகவும் மன்சுக் கூறினார். மத்திய அரசின் நிதியை மாநிலங்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    சுகாதார செயல்பாடுகளில் மாநிலங்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு மாநில அமைச்சர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி அழைப்பு விடுத்தார். 

    • வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
    • கொசு ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

    மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், நாடு முழுவதும் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதாரத்துறை மந்திரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

    கொசுமூலம் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, யானைக்கால் போன்ற பல்வேறு தொற்று நோய்களின் மாநில வாரியான பாதிப்பு குறித்து இந்த கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

    அப்போது பேசிய அவர், தமிழகம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்பட 13 மாநிலங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசு இனப்பெருக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், கொசு ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற மக்களின் பங்கேற்பு முக்கியமானது என்றும் கூறினார்.

    மேலும் குடிநீர், சுகாதாரம் போன்ற துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும், பிற தொடர்புடைய துறைகளுடன் நெருக்கமாக பணியாற்றுமாறும் மாண்டவியா அறிவுறுத்தினார்.

    மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சிகள் நாடு முழுவதும் நோய் பரவலைக் குறைப்பதற்கும் அகற்றுவதற்கும் வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, பீகார் சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டே, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், ஜார்கண்ட் மாநில சுகாதார அமைச்சர் பன்னா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • விவசாயிகளின் உரத்தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டின் உரத்தேவையில் 32 சதவிகிதத்திற்கு மேல் மெட்ராஸ் உரத்தொழிற்சாலை விநியோகிக்கிறது.

    மத்திய சுகாதாரம் குடும்பநலம் மற்றும் ரசாயன உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று சென்னை மணலியில் உள்ள மெட்ராஸ் உரத்தொழிற்சாலையை பார்வையிட்டார்.

    அந்த ஆலையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்த அவர், நமது விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆலை நிர்வாகத்தை அறிவுறுத்தினார்.

    மன்சுக் மாண்டவியா

    மன்சுக் மாண்டவியா

    தமிழ்நாட்டின் உரத்தேவையில் 32 சதவிகிதத்திற்கு மேல் மெட்ராஸ் உரத்தொழிற்சாலை வெற்றிகரமாக விநியோகித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், நடப்பு கரீஃப் பருவத்தில் 4.5 லட்சம் மெட்ரிக் டன் வேம்பு கலந்த யூரியா உரத்தை விநியோகித்திருப்பதாக கூறினார்.

    இந்தியாவில் உரப்பயன்பாட்டு முறையை மாற்றியமைக்கும் விதமாக, நானோ உர உற்பத்திக்கான வாய்ப்புகளில் கவனம் செலுத்துமாறும், தமிழகம் மற்றும் பிற மாநில விவசாயிகளின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் மெட்ராஸ் உரத் தொழிற்சாலை நிர்வாகத்தை மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.

    முன்னதாக சென்னை சேத்துப்பட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர்- கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    அங்குள்ள மாதிரி சேகரிப்பு மையம், அதிநவீன ஆய்வு மையம் ஆகியவற்றை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் மாண்டவியா கேட்டறிந்தார். தொடர்ந்து, அதிகாரிகளுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் காசநோய் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் மருத்துவர்களை பாராட்டிய அமைச்சர், காசநோய் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

     மா. சுப்பிரமணியன், மன்சுக் மாண்டவியா

     மா. சுப்பிரமணியன், மன்சுக் மாண்டவியா

    தொடர்ந்து, காசநோய் குறித்த அறிக்கை அடங்கிய புத்தகத்தை மந்திரி மாண்டவியா வெளியிட்டார். இந்த நிகழ்வில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழக சுகாதாரத்துறை செயலர் மரு. செந்தில்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொரோனா பெரும் சவாலாக உருவெடுத்தது. அப்போது நாமே ஆராய்ச்சி செய்து, தடுப்பூசியை தயாரித்து வழங்கினோம்.
    • இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கு நாம் தடுப்பூசி வழங்கியுள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேட்டில் பூச்சி கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கூடுதல் கட்டடம் கட்டப்பட உள்ளது.

    நிறுவன வளாகத்தில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா குத்துவிளக்கேற்றி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    கொரோனா பெரும் சவாலாக உருவெடுத்தது. அப்போது நாமே ஆராய்ச்சி செய்து, தடுப்பூசியை தயாரித்து வழங்கினோம். 130 கோடி மக்கள் கொண்ட நம் நாட்டில் தடுப்பூசியை கொண்டு சேர்ப்பது பெரும் சாதனையான விஷயம்.

    இதில் பிரதமர் மிகுந்த அக்கறை காட்டினார். ஒத்துழைத்த ஆராய்ச்சியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களின் கடுமையான உழைப்பால் நமக்கு தடுப்பூசி கிடைத்தது. இது நமக்கு பெருமை தரக்கூடிய விஷயம். இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கு நாம் தடுப்பூசி வழங்கியுள்ளோம்.

    நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியம். புதுவை மாநிலம் ஒரு ஆராயச்சி மையமாக திகழ்வதற்கு என் வாழ்த்துக்கள்.

    புதுவையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முதல்-அமைச்சர் ரங்கசாமியும், அரசும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

    இந்த ஆராய்ச்சி நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ., இந்திய மருத்துவ கவுன்சில் டைரக்டர் ஜெனரல் பல்ராம் பார்க்கவ், பூச்சி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அஸ்வினிகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • மருத்துவ பூச்சியியலில் பயிற்சிக்கான சர்வதேச செயல் திறன் மையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
    • ஜிப்மர் வளாகத்தில் சர்வதேச பொது சுகாதார பள்ளியை தொடங்கி வைக்கிறார்.

    மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்றும் நாளையும், புதுச்சேரி மற்றும் தமிழக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் நேற்றிரவு சென்னை வந்தார்.

    முதல்நாள் நிகழ்ச்சியாக இன்று புதுச்சேரியில் மருத்துவ பூச்சியியலில் பயிற்சிக்கான சர்வதேச செயல்திறன் மையத்துக்கு அடிக்கல் நாட்டுவார். தொடர்ந்து நோய்கள் கட்டுப்பாட்டு மையத்தில் நவீன வசதிகளை பார்வையிடும் அவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவார்.

    ஜிப்மர் வளாகத்தில் சர்வதேச பொது சுகாதார பள்ளியை தொடங்கி வைக்கும் மத்திய மந்திரி மாண்டவியா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், எம்.பி.க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், ரவீந்திரன், ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

    இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மன்சுக் மாண்டவியா, ஆவடியில் மத்திய அரசின் சுகாதார திட்ட நலவாழ்வு மையம் மற்றும் ஆய்வகத்துக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டுவார். இதனைத் தொடர்ந்து மாநில இ-தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனருடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    கிண்டியில் உள்ள மத்திய பெட்ரோ ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் புதிய தொழில்நுட்ப மையத்துக்கான அடிக்கல்லையும் அவர் நாட்ட உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது.
    • கொரோனா கால முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மறந்துவிடக் கூடாது என்றார் சுகாதாரத்துறை மந்திரி.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநில சுகாதார மந்திரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருப்பது முக்கியம்.

    அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவைகளை கடைப்பிடிப்பதை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

    பள்ளி செல்லும் குழந்தைகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்.

    முதியோர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவதையும் துரிதப்படுத்த வேண்டும். விரைவான கொரோனா பரிசோதனை மூலம் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க உதவும்.

    புது வகை மரபணு மாற்ற கொரோனா பரவுகிறதா என்பதை மாநிலங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

    கொரோனா பரிசோதனை, பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய 5 வழிமுறைகளையும் கட்டாயம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    ×